01.12.2012- KSC இன் வருடாந்த பொதுக்கூட்டமும் கழக இரவும்..

posted Dec 1, 2012, 3:54 AM by Web Team -A
காரைதீவு விளையாட்டுக்கழகத்தினதும் விபுலாநந்தா சனசமூக நிலையத்தினதும் “கழக இரவும் வருடாந்த ஒன்றுகூடலும்” எதிர் வரும் 29-12-2012 ம் திகதி சனிக்கிழமை இரு பிரிவுகளாக நடைபெறவுள்ளது. அன்று காலை 09.00 மணியளவில் வருடாந்த ஒன்று கூடலும் கழக பொதுக்கூட்டமும் நடைபெறும். அதன் பின்னர் மாலை 06.30 மணியளவில் கழக இரவும் விருந்துபசாரமும் காரைதீவு விளையாட்டுக்கழக தலமையகத்தின் அமரர் கனகசபை பத்மநாதன் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே கழக அங்கத்தவர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர் காரைதீவு விளையாட்டுக்கழகத்தினர்.

தகவல்: செயலாளர், காரைதீவு விளையாட்டுக்கழகம். 



Comments