02.01.16- நாளை காரைதீவில் கற்றல் நுணுக்கமும், பரீட்சைக்கு தயார்ப்படுத்தல் முறையும் செயலமர்வு.

posted Jan 2, 2016, 6:04 AM by Liroshkanth Thiru
காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தின் சிகரம் நோக்கிய டுத்த பணியாக காரைதீவின் கல்வி வளர்ச்சியினை மேம்படுத்தும் முகமாக எமது பிரதேச மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை விருத்தி செய்யும் நோக்கோடு இலவச விழிப்புணர்வுக் கருத்தரங்கினை நாளை 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காரைதீவு விபுலானந்த ஞாபகார்த மணிமண்டபத்தில் மாலை 3.30 மணியளவில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இக் கருத்தரங்கிற்கு க.பொ.த சாதாரணதரம் எழுதிய மாணவர்கள், உயர்தர பரீட்சை எழுத இருகின்ற மாணவர்கள், , பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், போட்டிப் பரீட்சைக்கு தோற்ற இருப்பவர்கள் என அனைவரும் கலந்து கொள்ள முடியும்.
Comments