02.01.16- புண்ணிய கிராமத்தில் காரைதீவு பிரதேச செயலகத்தின் புதுவருட நிகழ்வு..

posted Jan 1, 2016, 7:18 PM by Habithas Nadaraja   [ updated Jan 1, 2016, 7:20 PM ]
காரைதீவு பிரதேச செயலகத்தின்  புதுவருட நிகழ்வு  இம்முறை பிரதேச செயலாளர் திருமதி.சுதர்சினி சிறிகாந்த் தலைமையில் மிகவும் கோலாகலமாக காரைதீவு-9ம்பிரிவில் அமைந்துள்ள புண்ணிய கிராமமான கண்ணகி கிராமத்தில் இடம்பெற்றது. 
 
இந் நிகழ்வில் நந்திக் கொடியேற்றல், மங்கள விளக்கேற்றல்,புத்தாண்டு உறுதிமொழி எடுத்தல், கலை கலாசார நிகழ்வுகளும் இடம்​பெற்றன. கண்ணகி கிராம மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், பாடசாலை புத்தகப்பையும் பிரதேச செயலக ஊழியர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
Comments