02.02.15- தமிழர் முதலமைச்சராக வருவதற்கு ஒன்று படுபோம் : குமாரஸ்ரீ!

posted Feb 1, 2015, 6:27 PM by Unknown user
நாட்டில் நல்லாட்சிமாற்றம் இடம்பெற்றிருக்கின்ற இவ்வேளையில் கிழக்கு மாகாணசபையில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு அம்பாறை மாவட்ட தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு குரல்கொடுப்போம் 
இவ்வாறு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் காரைதீவுப்பிரதேச இணைப்பாளர் கே.குமாரஸ்ரீ விடுத்துள்ள அறைகூவலில் குறிப்பிட்டுள்ளார்.அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
கடந்த 3 தசாப்தகாலமாக தமிழ்மக்கள் எதிர்கொண்ட அனைத்து சவால்களும் துன்பங்களும் துயரங்களும் உலகமறிந்ததே. இந்நிலையில் துரதிஸ்டவசமாக அமபாறை மாவட்ட தமிழ்மக்களுக்கு சிறந்ததொரு அரசியல் தலைமைத்துவம் இல்லாதிருப்பது வேதனைக்குரியது.
2008 ஆண்டுமுதல் கிழக்கு மாகாணத்தை ஒரு தமிழ்மகன் ஆள்கின்றபோது சிறந்ததொரு அரசியல்பலம் இருந்தது.ஆனால் அப்பலத்தினை தொடர்ந்து தக்கவைப்பதற்கு எம்மவர்களே விரோதிகளாக இருந்த வரலாறும் மறக்கப்படக்கூடியதல்ல.
இன்றைய மாகாணசபையில் தமிழக்கூட்டமைப்பு 11உறுப்பினர்களைக்கொண்டிருந்த போதிலும் முதலமைச்சரைப்பெறுவதில் தலைமைகள் தீர்க்கமான முடிவைஎடுக்க வேண்டியது வரலாற்றுக்கடமையாகும்.கிழக்கு என்பதாலா கூட்டமைப்பின் பல தலைமைகள் வாய்மூடி மௌனமாயிருக்கின்றார்கள்? இல்லாவிட்டால் பக்கம் பக்கமாக அறிக்கை விடுவாஹ்ர்கள்.
ஆனால் நாம் அதில் தெளிவாக இருக்கிறோம். எமது தலைவர் சிவ.சந்திரகாந்தன் அன்றே அதற்கான ஆதரவை எவ்வித நிபந்தனையுமில்லாமல் பகிரங்கமாக அறிவித்தார். எமது கட்சி தமிழ்மக்கள்மீது கொண்டுள்ள பற்றுக்காரணமாகவே அப்படி நடந்துவருகிறது. தமிழ்க்கூட்டமைப்பு விட்டுவரும் வரலாற்றுத்தவறுகளை நாம் விடமாட்டோம்.
எதுஎப்படியிருப்பினும் கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கான சகல ஆதரவையும் தர நாம் ஒன்றுபடுவோம்.
தகவல்:காரைதீவு  நிருபர்
Comments