02.03.16- இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம்; இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையில்லை..

posted Mar 2, 2016, 7:17 AM by Web Admin   [ updated Mar 2, 2016, 7:33 AM ]
7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இந்தோனேஷியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவிச்சரிதவியல் ஆய்வு மையம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. சுமத்திரா தீவின் மேற்குப் பகுதியில் சுனாமி ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
           இருப்பினும், இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments