03.04.16- 2016ம் ஆண்டுக்கான மோகன் -கணேஷ் ஞாபகார்த்தக் கிண்ண இருபது கிரிக்கெட் சுற்றுப் போட்டி..

posted Apr 2, 2016, 5:43 PM by Habithas Nadaraja   [ updated Apr 2, 2016, 5:44 PM ]
2016ம் ஆண்டுக்கான மோகன் -கணேஷ் ஞாபகார்த்தக் கிண்ண இருபது - இருபது கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வானது காரைதீவு கனகரட்னம் விளையாட்டு மைதானத்தில் 2016.04.02ம் திகதி இடம்பெற்றது.

இச் சுற்றுப்போட்டியினை நாடாத்துகின்ற காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத் தலைவர். லயன்.எஸ். நேசராசா (உத்தரவுபெற்ற நில அளவையாளர்) தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் 
திரு. எஸ். விவேகானந்தராசா மற்றும் சிறப்பு அதிதிகளாக திரு. மு. வரதராசன் (புள்ளிவிபர உத்தியோகத்தர்), திரு.மு. கருணாநிதி (தொழில்நுட்ப உத்தியோகத்தர்), தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் திரு. மு. ரமணீதரன் அகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.மற்றும் கழகச் செயலாளர், கழக கிரிக்கட் முகாமையாளர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

Comments