02.04.2013- கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் KSC சம்பியன்..

posted Apr 2, 2013, 12:05 AM by Web Team -A
கல்முனை மிஸ்பாஹ் விளையாட்டுக் கழகம் மின்னொளியில் நடாத்திய மிஸ்பாஹ் ஐக்கிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன் கிண்ணத்தை காரைதீவு விளையாட்டுக்கழகம் சுவீகரித்தது. கல்முனை மிஸ்பாஹ் விளையாட்டுக்கழகம் கல்முனை கடற்கரை திடலில் ஒழுங்கு செய்திருந்த கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 22 விளையாட்டுக்கழகங்கள் பங்கேற்றன. அரையிறுதிப் போட்டிகளில் சாய்ந்தமருது அல் ஜலால் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்தாடிய காரைதீவு விளையாட்டுக்கழகமும் நிந்தவுர் மதீனா விளையாட்டுக்கழகத்தை எதிர்த்தாடிய கல்முனை வை.எப். சீ. விளையாட்டுக்கழகமும் இறுதிப்போட்டியில் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் கல்முனை வை.எப்.சீ.விளையாட்டுக்கழகத்தை எதிர்த்தாடிய காரைதீவு விளையாட்டுக்கழகம் 2 – 1 என்ற செட் அடிப்படையில் வெற்றி பெற்று ஐக்கிய வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
தகவல்: செயலாளா்,
காரைதீவு விளையாட்டுக்கழகமும்.


Comments