02.06.15- அதிகாலை திருக்குளிர்ச்சி பாடலுடன் திருக்குளிர்ச்சி விழா நிறைவடைந்தது.

posted Jun 1, 2015, 11:24 PM by Habithas Nadaraja
காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய மன்மத வருட திருக்குளிர்ச்சி விழா இன்றுடன் நிறைவடைந்தது.வைகாசிமாதம் 11ம் நாள் (25.05.2015) அன்று கடல் தீர்த்தம் எடத்து வந்து திருக்கல்யாணக்கால் நாட்டலுடன் ஆரம்பமான திருக்குளிர்ச்சி விழா மரவு முறைப்படி
மதியப் பூசை, இரவு பூசை மற்றும் ஊர்சுற்றுகாவியம் பாடல் என மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.வைகாசிமாதம் 19ம் நாள் (02.05.2015)ம் திகதி இன்றைய தினம் அதிகாலையில் நடைபெற்ற விசேட பூசை நிகழ்வை தொடந்து திருக்குளிர்ச்சி பாடலுடன் திருக்குளிர்ச்சி விழா நிறைவடைந்தது. அத்துடன் இன்றைய தினத்தில் தங்களது குழந்தை செல்வத்தை அம்மனுக்கு கொடுத்து வாங்கும் நிகழ்வு குழந்தைகளுக்கு முதலாவது முறையாக சாதம் ஊட்டுகின்ற நிகழ்வுகள் மிகவும் பக்திபுர்வமாக நடைபெற்றது.Karaitivunews.com


                                                                                                     மேலதிக படங்களிற்கு..

Comments