02.06.18- காரைதீவில் சிறந்த ஊடகத்துக்கான விருது காரைதீவுநியூஸ்.கொம் இணையதளத்துக்கு..

posted Jun 1, 2018, 7:15 PM by Habithas Nadaraja   [ updated Jun 1, 2018, 7:16 PM ]
திக்கெட்டும் உலகெல்லாம் தேன் சுவையுடன் ஊடகம் வாயிலாக காரைதீவின் செய்திகளை காரைதீவிலிருந்து  செய்தி வடிவில் கடந்த பல ஆண்டுகளாக உலகறியச் செய்து கொண்டிருக்கும் மிகச் சிறந்த ஊடகமாம் Karaitivunews.com இணைய தளத்துக்கு காரைதீவில் சிறந்த ஊடகத்துக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்ட ஊடக இணையதளமான Karaitivunews.com காரைதீவில் இடம்பெறும் சமய, கல்வி,கலை கலாசார, சமூக விளையாட்டு மற்றும் பல நிகழ்வுகளை செய்தி வடிவிலாக மாற்றி காரைதீவின் சிறப்புக்களை உலகறியச் செய்து கொண்டிருக்கின்ற மிகச் காரைதீவிலுள்ள மிகச் சிறந்த ஊடகமாகும்.

காரைதீவு மண்ணில் சிறந்த வீரர்களாக திகழ்ந்த அமரத்துமடைந்த மோகன் கணேஸ் ஞாபகாத்தமாக இவர்களது குடும்பத்தினர் ஓவ்வோரு ஆண்டும் நினைவாக பல நிகழ்வுகளை நடாத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்வுகள் அனைத்துக்கும் Karaitivunews.com இணையதளம் ஊடக அனுசரனை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்காக இணையதளத்தை கௌரப்படுத்தும் முகமாக இந்த ஆண்டு இடம் பெற்ற கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் பரிசளிப்பு நிகழ்வில் அவர்களது குடும்பத்தினர் காரைதீவில் சிறந்த ஊடகத்துக்கான விருதினை வழங்கி கொளரவப்படுத்தினர்.

இதற்காக இவர்களது குடும்பத்தினருக்கு மனமுகந்த நன்றிகளை இணையதள குழுவினர் தெரிவித்து கொள்கின்றனர்.காரைதீவில் பல செய்தி ஊடக நிறுவனங்கள் காணப்பட்டாலும் Karaitivunews.com க்கு கிடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Comments