02.07.15- காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் அரங்கேறும் சீரழிவுகளும், தீர்வுகளும்.

posted Jul 2, 2015, 10:30 AM by Liroshkanth Thiru
காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானம் அமையப்பெற்றிருப்பது எமது பிரதேச விளையாட்டுத் துறையினருக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். ஆனாலும்கூட சில நாசகாரக் கிருமிகளின் செயற்பாட்டால் இவ் மைதானம் சீரழிக்கப்பட்டு வருகின்றது. இதை காரைதீவு பிரதேசசபைகூட கவனம் செலுத்தாதது கவலைக்கிடமான விடையமாகும்.

இவ் மைதானத்தில் நடைபெறும் சீரழிவுச் செயற்பாடுகள்..

01. மைதான அரங்கிலிருந்து மது அருந்திவிட்டு மதுப் போத்தல்களை அவ்விடத்திலேயே உடைத்துவிட்டு செல்கின்றனர். அதுமட்டுமல்லாது புகைத்தல் பொருட்களான சிகரட் எச்சங்களையும் அவ்விடத்திலேயே போட்டு அலங்கோலமாக்குகின்றனர்.

02. அரங்கில் பொருத்தப்பட்டிருந்த மின்குமிழ்கள், அறைகளிற்கான கதவுகள் மற்றும் சில பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.

03. சில மனச்சாட்சி அற்ற மனிதர்கள் அரங்கை சேதப்படுத்துகின்றனர்.

04. சிலர் தங்களது கால்நடைகளை விளையாட்டு மைதானத்தில்  மேய்ச்சலிற்கு விடுகின்றனர். இதனாலும் மைதானமானது சேதத்திற்குள்ளாகின்றது.

இதற்கான தீர்வுகளாக நாம் அறிந்தவை சிலற்றை எம் வாசகர்களின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்..

01. அரங்கு அறைகளை சுத்தப்படுத்தி கதவு இடல், அத்துடன் ஒவ்வொரு அறையையும் காரைதீவின் மூன்று பெரும் கழகங்களிற்கு பொறுப்பளித்தல்.

02. கடினப்பந்து வலை பயிற்சி செய்யும் இடத்தில் வலை அற்று காணப்படுகின்றமையினால் அவ் இடத்திற்கு வலை இடல்.

03. கூடைப்பந்தாட்ட மைதானத்தின் அரைவாசியை திருத்துவதற்காக உடைக்கப்பட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் அம் மைதானமானது திருத்தப்படாமலே காணப்படுகின்றது. அதனை கவனத்தில் எடுத்தல்.

04. மைதானத்திற்கு இரவு நேர பாதுகாவலரை இடுதல்..

இவற்றுக்கான செலவுகளை ஈடுகட்டுவதற்கான நடவடிக்கைகளில் எமக்கு தெரிந்தவற்றுள் சில..

01. காரைதீவு பிரதேச அணிகள் தவிர்ந்த சில அணிகள் பிரதேச சபையில் அனுமதிப் பணம் செலுத்தாமலேயே விளையாடுகின்றனர். இவர்களிடம் பணத்தை அறவிடல் . அதனை மீறி விளையாடும் சந்தர்ப்பங்களில் தண்டப்பணம் அறவிடல்.

02. காரைதீவின் பெரும் விளையாட்டுக்கழகங்களிடமிருந்து ரு சிறுதொகை பணத்தினை ஆறு மாதங்களிற்கு ஒரு தடவையோ அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு தடவையோ அறவிடலாம். (அரங்கின் அறைகளிற்கான வாடகையாக)

03. பெரிய பணவரவைக் கொண்டு நடாத்தப்படும் போட்டித் தொடர்களில் மைதான அனமதிப் பணத்தை அறவிடுதல்.

04. மைதானத்திலிருந்து மது அருந்துதல் , மைதானத்தை சீரளித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களிடமிருந்து சட்ட ரீதியான முறையில் தண்டப்பணத்தினை பெற்றுக்கொள்ளல்.
 
எமது மேற்படி நடவடிக்கைகள் அனைத்துமே எமது காரைதீவுப் பிரதேசத்தினை ஒழுக்கக் கட்டுப்பாடுள்ள மற்றும் ஏனைய  பிரதேசங்களிற்கு ஒரு எடுத்துக்காட்டாக வளர்த்தெடுப்பதே முற்றுமுழுதான குறிக்கோளாகுமே தரவி பிறர் மனதை புண்படுத்தவோ, பிறர் பிழைகளை சுட்டிக்காட்டவோ அல்ல என்பதை அனைவரினதும் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.

திறனாய்வு மற்றும் பிரதியாக்கம்: 
கிருஸ்ணமூர்த்தி கபிலன்


Comments