02.07.2013- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் காரைதீவு விஜயம்..

posted Jul 2, 2013, 10:16 AM by Web Team -A   [ updated Jul 4, 2013, 9:10 AM ]
அமைச்சர் கௌரவ. டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் காரைதீவிற்கான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். மேலும், இன்று பி.ப 4.30 மணியளவில் காரைதீவு கண்ணகையம்மன் ஆலயத்தினைத் தரிசித்ததுடன் காரைதீவின் உள் வீதிவழியாக காரைதீவு-08ம் பிரிவிலுள்ள நேரு சனசமூகச் சந்தியிலிருந்து பாலையடிப்பிள்ளையார் ஆலயம் வரை பாண்ட் வாத்தியங்களுடன் அழைத்துவரப்பட்டு பாலையடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமேடைக்கு அழைத்துவரப்பட்டார். இந்நிகழ்வின் போது காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ.செல்லையா இராசையா உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர். 
இந்நிகழ்வின்போதான காட்சிகளில் சில..
படங்கள்: நீதன், கவிதாஸ் karaitivunews.com


Comments