02.07.2014 - காரைதீவு 12 பிரதேச மக்களை தவிசாளர் சந்திப்பு....

posted Jul 2, 2014, 10:20 AM by Unknown user
இன்று (02.07.2014) காரைதீவு பிரதேச சபை  தவிசாளருடனான  மக்கள் கலந்துரையாடல் காரைதீவு 12 இல் அமைந்துள்ள கலைமகள் முன்பாடசாலையில் இடம்பெற்றது. இதன்போது காரைதீவு 12 பிரதேச அபிவிருத்தி தொடர்பாக பல விடயங்கள் ஆராயப்பட்டதுடன் 
தவிசாளர், மக்களின் பிரச்சனைகள் மற்றும் தேவைகளை அவர்களிடமே கேட்டு அறிந்து பிரச்சனைகளை அணுகும் முறைகள் மற்றும் அதற்கான தீர்வுகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வைத்ததோடு,
அடிப்படை தேவைகள் மிகவிரைவில் தீர்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை  உறுப்பினரான திரு.S.பாஸ்கரன்,காரைதீவு 12 பிரதேச சமுர்த்தி உத்தியோகஸ்தர் திரு. நாகேந்திரன், ஆதிசிவன் ஆலய தலைவர் திரு .M.புஸ்பநாதன் ஆகியோரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


karaitivunews.com
Comments