02.08.16- காரைதீவு அருள்மிகு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் தேவஸ்தானஆடி அமாவாசை தீர்தோற்சவம்..

posted Aug 2, 2016, 10:30 AM by Habithas Nadaraja   [ updated Aug 2, 2016, 10:31 AM ]
கிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவத் திருவிழா கடந்த 24.07.2016ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 9நாட்கள் திருவிழாக்கள்  சிறப்பாக நடைபெற்று 10ம் நாளாகிய இன்றையதினம் ஆடி அமாவாசை தீர்தோற்சவம் இடம் பெற்றது.கண்ணேபோல் எமை வளர்த்தாளாக்கி விட்ட
தந்தையர்கள் விண்ணகம் சென்ற ஆடி
அமாவாசைத் திதி இன்றல்லோ!
கண்ணூதலாள் திருவருளால் எம் தந்தையர்கள்!
அண்ணாமலையான் திருவடியில் நிதம் வீற்றிருக்க
கண்களில் நீர்மல்க சிவன் பொன்னடிகள்
வணங்கி நின்று விண்ணவர்கள் தம்முடனே
தந்தையர்கள் நிதம் வாழ புண்ணிய
காரியங்கள் சமுத்திரத்தில் செய்வோம்!
எண்ணியவை கைகூடும் இவ்விரதம் நாம் காத்தால்
பண்ணிய பாவங்கள் தீர்த்தருள்வான் சிவனவனே!
அண்ணலே அண்ணாமலையானே எம் தலைவா!
கண்ணே! மணியே! எம் தந்தையரைக் காருமய்யா!
பண்ணிசைத்துப்பாடி உனை நாம் தினம்
தொழுவோம்.
விண்வந்த தந்தையரைக் காத்தருள்வாய் சிவனே!
வரகவி வேலணை வேணியன்


Comments