02.08.2012- காரைதீவுப் பிராந்தியத்தில் 12 மணிநேர நீர் வெட்டு..

posted Aug 1, 2012, 11:59 PM by Web Team -A   [ updated Aug 2, 2012, 12:40 AM ]
காரைதீவுப் பிராந்தியத்திற்குட்பட்ட தேசிய நீர் வழங்கல் அதிகாரசபையின் குழாய் குடி நீர் பாவனையாளர்கள் பாரிய நீர்த்தட்டுப்பாட்டினை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தட்டுப்பாடானது கடந்த சில நாட்களிலிருந்து காணப்படுகின்றது.

தினமும் மதியம் 1.00 மணிமுதல் 3.00 மணிவரையும்
இரவு நேரங்களில் 7.00 மணிமுதல் அதிகாலை 5.00 மணிவரையும்

இக் குடி நீர்த் தட்டுப்பாடு காணப்படுகின்றமையால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். நீர் வெட்டு நாளுக்கு 12 மணித்தியாலயம் உள்ளபடியினால் பாரிய சிக்கல்களுக்கு மக்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. மேலும் இங்கு வாழும் மக்களில் 90 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் கிணறுகள் அற்ற நிலையில் இக்குழாய் குடி நீரை மாத்திரமே பாவிப்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments