02.08.2013- தயாரிக்கப்படவிருக்கும் "அம்மா சொன்னாங்க" குறுந்திரைப்படம்..

posted Aug 2, 2013, 2:44 AM by Web Team -A
காரைதீவு, பிரியாஸ் மூவிஸ் தயாரிக்கவிருக்கும் அடுத்த குறுந்திரைப்படமான "அம்மா சொன்னாங்க" தொடர்பான கலந்துரையாடலானது எதிர் வரும் சனிக்கிழமை 03.08.2013 பி.ப.4.00 மணிக்கு காரைதீவு சண்முகாமகாவித்தியாலய மண்டபத்தில் கலந்துரையாடலும் மாதாந்தக் கூட்டமும் இடம்பெற உள்ளது. இந் நிகழ்வில்கலந்து கொள்ள கலைத்துறையில் ஆர்வமுள்ளவர்களை பிரியாஸ் மூவிஸ் நிறுவனத்தினர் அழைக்கின்றனர். மேலும் இதுவரையில் காரைதீவில் இரு குறுந்திரைப்படங்களான "பட்டறிவு" மற்றும் "தோழா"  வெளியிடப்பட்டுள்ளமையுடன் இதில் பிரியாஸ் மூவிஸ் தாபனத்தினரால் தயாரிக்கப்பட்டு மக்ளிடையே பெருவரவேற்பினைப்பெற்ற "பட்டறிவு"  படத்திற்கு பின்னர் பிரியாஸ் மூவிஸ் தயாரிக்கும் இரண்டாவது குறுந்திரைப்படம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Comments