02.08.2013- VSC சிரேஸ்ட வீரர் கௌரவிப்பு..

posted Aug 2, 2013, 2:40 AM by Web Team -A   [ updated Aug 2, 2013, 2:42 AM ]
விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தினரால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட செய்தியில், "கழகத்தின் சிரேஸ்ட வீரரான அருமைத்துரை கோபி அவர்கள் விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் நிருவாகத்தினர் மற்றும் கிரிக்கட் வீரர்களினால் அண்மையில் கௌரவிக்கப்பட்டார். கடினபந்து கிரிக்கட் துறையின் ஆரம்பகால சகலதுறை வீரரான இவர் கழகத்திற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக கௌவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தற்போது ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் நகரில் வசிக்கும் இவர் தமது பிரதேசத்திற்கு வருகைதந்து கழக கிரிக்கட் வீரர்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும் வழங்கிவைத்தமைக்காக அவர்களுக்கு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தினர் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல்: VSC - ஊடகப்பிரிவு



Comments