02.09.14-காரைதீவு நேரு சன​சமூக​ நிலையத்தின் நீர் இணைப்பு அங்குராப்பணம்

posted Sep 2, 2014, 4:43 AM by Unknown user
திருவாளர் V.நிரோஷன் (லண்டன்) அவர்களின் நிதியுதவியினால் நேரு சன​ சமூக​ நிலையத்தில் நீண்டநாள் குறைபாடாக​ இருந்த​ நீர் இணைப்பு இன்று(02.09.2014) கிடைக்கப் பெற்றது.
இதன் மூலம் சன​ சமூக​ நிலையத்தினால் நிருவகிக்கப்படுகின்ற​ சிறுவர் பாடசாலையும் அதிக​ பயனைப் பெறுகின்றது. இதனை சம்பிரதாயபூர்வமாக​ 2014.09.02ம் திகதி திருவாளர் V.நிரோஷன் (லண்டன்) திறந்து வைத்தார்.
இவ் வைபவத்தில் நேரு சன​ சமூக​ நிலையத்தின் போசகர் R.திருநாவுக்கரசு (தலைவர்) M.ரமணீதரன்(செயலாள்ர்) V.கிருஸ்ணமோகன்(பொருளாளர்) G.வினோதரன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் பெற்றோர்கள் பங்கு பற்றி சிறப்பித்தனர்.  
                                                                                                   photos by: Lirosh









Comments