02.09.2012- 25வது ஆண்டு வெள்ளி விழா

posted Sep 2, 2012, 4:25 AM by Web Team -A

விவேகானந்தா விளையாட்டுக்கழகம் தனது 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாடுவதனை முன்னிட்டு பெருமையுடன் நடாத்தும் கடினபந்து கிரிக்கட் 20-20 கோட்டித்தொடரின் அரையிறுதிப்போட்டி முடிவுகள்.

தொடரின் முதலாவது அரையிறுதிப்போட்டியில் கல்மனை ரொப்பாஸ் அணியை எதிர்த்து விளையாடிய கல்முனை ரொப் ராங் அணியினர் 02 விக்கட்டுக்களால்வெற்றிபெற்றது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ரொப் ராங் அணியினர் முதலில் களத்தடுப்பினைத் தெரிவுசெய்ய ரொப்பாஸ் அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 138 ஒட்டங்ளைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ரொப் ராங் அணியினர் மிகுதி ஒரு பந்து மீதமிருக்கையில் 02 விக்கட்டுக்களால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவசெய்யப்பட்ட முதலாவது அணியாக தெரிவாகியது. சகல துறைகளிலும் பிரகாசித்த ரொப் ராங் அணித் தலைவர் பைசால் (3/21, 26*) சிறந்த வீரராகத் தெரிவுசெய்யப்பட்டு அதிதியாகக் கலந்துகொண்ட திரு.எஸ்.நேசராசா (உத்தரவுபெற்ற நில அவையாளர்) அவர்களினால் விருதினைப் பெற்றுக்கொண்டார்.

இரண்டாவது அரையிறுதிப்போட்டியானது 02.09.2012 ம் திகதி ஞாயிற்றுக்கிமை பி.ப 2.00 மணிக்கு கல்முனை ஜிம்கானா விளையாட்டுக்கழக அணியிரை எதிர்த்து காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழக அணியினர் மோதவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : Ramaneetharan Muthulingam


Comments