02.09.2012- V.S.C அணியினர் அரையிறுதிப்போட்டியில் வெற்றி..

posted Sep 2, 2012, 10:38 AM by Web Team -A

விவேகானந்தா விளையாட்டுக்கழகம் தனது 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாடுவதனை முன்னிட்டு பெருமையுடன் நடாத்தும் கடினபந்து கிரிக்கட் 20-20 கோட்டித்தொடரின் 2வது அரையிறுதிப்போட்டி முடிவுகள்.

தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் கல்முனை ஜிம்கானா அணியை எதிர்த்து விளையாடிய காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தினர் 50 ஓட்டங்களால் வெற்றிபெற்றனர்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தினர் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் முடிவில் 167 ஒட்டங்ளைப் பெற்றனர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஜிம்கானா அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதனால் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தினர் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவசெய்யப்பட்டனர். அப்போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் வீரர் சோபிதாஸ் 35 பந்து வீச்சுக்களில் 57 ஓட்டங்களையும், பந்து வீச்சில் 3 விக்கற்றுக்களையும் வீழ்த்தி போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும், கஜந்தன் (35 ஓட்டம்), கஜேந்திரா (33 ஓட்டம்) எனவும் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் வீரர்கள் தங்களது அணிக்கான பங்களிப்பினை செய்தனர்.

தகவல்: கஜன்

karaitivunews.com


Comments