02.09.2013- GCE(O/L) மாணவர்களுக்கான 5 நாள் முன்னோடி கருத்தரங்கு..

posted Sep 2, 2013, 6:10 AM by Web Admin   [ updated Sep 2, 2013, 6:18 AM ]
காரைதீவு 2003 உயர்தரபிரிவு சமூக சேவை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட க.பொ.த சா/த மாணவர்களுக்கான 05 நாள் இலவசக் கல்விக் கருத்தரங்கானது காரைதீவு விபுலானந்த மணி மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் காரைதீவு, கல்முனை, வீரமுனை, மல்வத்தை முதலான பல பிரதேசங்களிலுள்ள மாணவர்கள் சுமார் 250 பேர் கலந்த கொண்டனர். இறுதி நாள் நிகழ்வுகளின் போது மாணவர் கருத்துக்கள் மற்றும் நடைபெற்ற பாடங்களில் வைக்கப்பட்ட பரீட்சைகளில் கூடிய புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு அதிதிகளாக பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன்,  உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா,  பொறியியலாளர் கே.சசிகுமார் ஆகியோர் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தனர்.

தகவல்: காரைதீவு நிருபர்









Comments