02.10.14 - விபுலானந்த​ மத்திய கல்லூரியின் கலைவாணி ஊர்வலம்..

posted Oct 2, 2014, 3:49 AM by Unknown user
சரஸ்வதி பூஜையின் 09ம் நாளாகிய​ இன்று கமு/கமு/விபுலானந்த மத்திய​ கல்லூரியின் புதிதாக​ நிர்மாணிக்கப்பட்ட​ சரஸ்வதி தேவியின் திருவுருவச்சிலையுடனான​ கலைவாணி ஊர்வலமானது கல்லுரி முதல்வர் திரு.வித்தியராஜன் தலைமையில் பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள்,மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பங்கு பற்றுதலுடன் சிறப்பாக​ இடம் பெற்றது.

மேற்படி ஊர்வலமானது காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்த​ போதிலும் மழையின் நிமிர்த்தம் காலை 8.50 மணிக்கு ஆரம்பமாகி தேரோடும் வீதி வழியாக​ காரைதீவிலுள்ள ஒவ்வொரு பாடசாலைக்கும் சென்று கமு/கமு/விபுலானந்த​ மத்திய​ கல்லூரியை வந்தடைந்தது. தொடர்ந்து மழையின் மத்தியிலும் கலைவாணி ஊர்வலம் சிறப்பாக​ இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொடர்ந்த​ அடைமழையின் மத்தியிலும் அதிகூடிய​ மாணவர்கள் கலந்து ஊர்வலத்தினை சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
                                                                                                     நன்றி:லிரோஷ்,நிரோஷன்


karaitivunews.com
Comments