02.10.15- சிறுவர், முதியோர் தின நிகழ்வுகள் காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் உணர்வுபூர்வமாக.

posted Oct 2, 2015, 4:42 AM by Liroshkanth Thiru
ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் சிறுவர் தினமும் அதேபோன்று முதியோர் தினமும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இவ்வருடம் காரைதீவு பிரதேச செயலகத்தினால் திட்டமிடப்பட்டு முதியவர்கள் எனப்படுபவர்கள் ஒரு வீட்டை நோக்கினாலும் சரி ஒரு நாட்டை நோக்கினாலும் சரி அவர்கள் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் எனும் தொனிப்பொருளிலும், சிறுவர்கள் துளிர் விட்டு வேர் ஓங்க வேண்டும் எனும் தொனிப்பொருளிலும் இன்று 02ம் திகதி நண்பகல் 12 மணியளவில் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் விசேட பூசை நிகழ்வுகளோடும் , சிறுவர்கள் முதியவர்களிடம் ஆசி பெறுகின்ற சிறப்பு நிகழ்வோடும் வெகு சிறப்பாக சிறுவர் மற்றும் முதியோர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. 

இச்சிறப்பு நிகழ்வுகள் அனைத்தும் காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி .சுதர்சினி சிறிக்காந் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந் நிகழ்வில் ஆசியுரை மற்றும் சிறப்புரையினை கல்முனை அம்பலத்தடி சித்தி விநாயகர் ஆலய பிரதம சிவாச்சாரியார் சாம்பஸ்ரீ ரவிஜீ குருக்கள் நிகழ்த்தினார்.

குறிப்பாக இச் சிறுவர் மற்றும் முதியோர் தினங்கள் இத்தனை வருட காலமும் பிரதேச செயலக மட்டங்களிலும், பாடசாலை மட்டங்களிலும் ,  வீதி நாடகங்கள் வடிவிலும்தான் இத் தினமானது செயற்படுத்தப்பட்டு வந்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் இவ்வருடம்  காரைதீவில் உணர்வு ரீதியாக  கலை கலாசாரங்களை பிரதிபலிக்கக் கூடிய வகையில் இன்றைய சமூக கட்டமைப்பினை உணர்ந்து எமது காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி.சுதர்சினி சிறிக்காந் அவர்கள் மேற்படி நிகழ்வினை ஆக்க பூர்வமான ரீதியில் செயற்படுத்தியமைக்கு எமது காரைதீவுக் கிராமத்தின் செய்தி இணையதளமாகிய www.karaitivunews.com சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அடுத்ததாக இவ்வாறானதொரு மதிப்பு மிக்கதொரு தினத்தை ஆலயத்திலே செய்தமைக்காக காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி. சுதர்சினி சிறிக்காந் அவர்களுக்கு காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.


Comments