02.10.15- இன்று காரைதீவுச் சந்தியில் அனாதரவான நிலையில் சடலம் மீட்பு..

posted Oct 1, 2015, 10:06 PM by Liroshkanth Thiru   [ updated Oct 1, 2015, 10:08 PM ]
காரைதீவு பிரதான வீதியிலுள்ள  விபுலானந்த சதுக்க முச்சந்தியில் அனாதரவான நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காலை இச்சடலம் காரைதீவு முச்சந்தியிலுள்ள பேருந்து தரிப்பிடக் கட்டடத்தினுள் கிடக்கக்காணப்பட்டது.
சுமார் 65-70 வயது மதிக்கத்தக்க முதியவரொருவரின் சடலமாக இருக்கலாம். எனினும் இதுவரை யாரென்று அடையாளம் காணப்படவில்லை.

சம்மாந்துறைப் பொலிசார் காலை ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். 
சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் கே.கருணாகரன் காலை 9.30மணியளவில் ஸ்தலத்திற்கு விரைந்து பார்வையிட்டார். சடலத்தை வைத்திய பரிசோதனைக்காக சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல ஏற்பாடுகள் இடம்பெற்றது. 
அங்கு 2வாரங்கள் அடையாளம் காண்பதற்காக வைக்கப்படுமென்று தெரியவருகிறது. அம்பாறையிலிருந்து விசேட சொக்கோ பொலிஸ் குழுவொன்றும் அழைக்கப்பட்டுள்ளது.

காரைதீவு நிருபர்Comments