02.10.15- நாளை காரைதீவில் விசேட பொதுச்சபைக்கூட்டம்.

posted Oct 1, 2015, 8:12 PM by Liroshkanth Thiru   [ updated Oct 1, 2015, 8:32 PM ]
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் விசேட பொதுச்சபைக்கூட்டம் நாளை சனிக்கிழமை காலை 9 மணியளவில் காரைதீவு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

பேரவையின் பிரதம செயற்பாட்டாளர் ஜலீல் ஜீயின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில் பேரவையின் செயற்பாடுகளை எதிர்காலத்தில் சிறப்பாக முன்னெடுத்துச்செல்ல சிறந்த நிருவாகிகள் குழுவினர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

 மாவட்ட தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் ஆவணமாக்கப்பட விருப்பதுடன் முதற்கட்டமாக பேரவையில் அங்கம்வகிக்கும் கவிதாயினிகளின் படைப்புக்களை நூல்வடிவில் கொண்டுவரவும் ஏற்பாடாகியுள்ளது.

 பேரவையின் உறுப்பினராகவிருந்து முதல்முதல் இறைபதமடைந்த மறைந்த பிரபல பெண் எழுத்தாளர் பாண்டிருப்பைச் சேர்ந்த திருமதி கமலாம்பிகை லோகிதராஜாவின் நினைவிடைதோய்தல் நிகழ்வை நடாத்துவது தொடர்பில் ஆராயப்படவிருக்கிறது.

 அழைப்புவிடுக்கப்பட்ட உறுப்பினர்களில் தகுந்த காரணமின்றி அறிவிக்காமல் சமுகமளிக்கத்தவறுகின்ற உறுப்பினர்களின் நேரடி நிரந்தர அங்கத்துவம் தொடர்பில் சிந்திக்கவேண்டிவருமென்பதையும் ஏற்பாட்டாளர் ஜலீல் ஜீ குறிப்பிட்டுள்ளார்.

 மேலும் எதிர்காலத்தில் மேற்படி பேரவை பலஅர்த்தபுஸ்டியான  கலைஇலக்கிய செயற்பாடுகளை தொடர்ச்சியாக நடாத்த திட்டமிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

காரைதீவு நிருபர்


Comments