02.10.15- உலக இருதய தின விழிப்புணர்வுப் பேரணியும் செயலமர்வும் காரைதீவில்.

posted Oct 2, 2015, 2:07 AM by Liroshkanth Thiru   [ updated Oct 2, 2015, 2:51 AM ]
உலக இருதய தினத்தை ஒட்டிய விழிப்புணர்வும் பேரணியும், விழிப்புணர்வுச் செயலமர்வும் இன்று 02ம் திகதி காரைதீவில் நடைபெற்றது.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட இந் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக விழிப்புணர்வுப் பேரணியானது காரைதீவின் பிரதான வீதியூடாக நடைபெற்று இறுதியாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தை வந்தடைந்ததும் அங்கு விழிப்புணர்வு செயலமர்வும் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் காரைதீவு சண்முக மகா வித்தியலாய மாணவர்ககள் ,  அல் அஷ்ரப் மகாவித்தியாலய மாணவர்கள் , காரைதீவு பிரதேச செயலக ஊழியர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்தகொண்டனர்.

மேற்படி நிகழ்வுகள் அனைத்தும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லீமா பஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நன்றி: குகராஜ்


Comments