02.10.19- காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் திருப்புகழ் ஓதுதல் நிகழ்வு..

posted Oct 1, 2019, 6:49 PM by Habithas Nadaraja   [ updated Oct 1, 2019, 6:50 PM ]
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் மூன்றாவது வருடமாகவும் திருப்புகழ் ஆரம் ஓதுதல் நிகழ்வானது காரைதீவு ஸ்ரீ தண்டாயுதபாணி பிரம ஞான சபையின் தலைவர் திரு. செ. அருளானந்தன் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக 28.09.2019 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு பாண்டிருப்பு மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்இ காரைதீவு  மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயங்களினுடைய பிரதம குரு சிவசிறி மு.கு. சபாரெத்தினம் ஐயா அவர்களின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்டு சிறப்புச் சொற்பொழிவினை ஸ்ரீ தண்டாயுதபாணி பிரம ஞான சபையின் கிழக்குப் பிராந்திய இணைப்பாளர் கௌரவ யு.து. ரவிஜீ குருக்கள் வழங்க சமயப் பற்றாளர்கள் பலரும் ஆலயங்களினுடைய தலைவர்களும் கலந்து சிறப்பித்து இந்த நிகழ்வின் முக்கியத்துவம் பற்றி எடுத்தக்கூறினர்.

அதனைத் தொடர்ந்து திருப்புகழ் ஆரம் ஓதுதல் நிகழ்வானது ஆரம்பிக்கப்பட்டு மிகவும் சிறப்பான முறையில் முருகப்பெருமானின் அருளோடு மாலை நான்கு மணிவரை நடைபெற்றது. இந்நிகழ்வில் பலர் பங்குகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.

இற்றைக்கு சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் செய்த தவப்பயனால் அவதரித்தவர் அருணகிரிநாதர். இவர் தனக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக வல்லாள மன்னனின் கோபுரத்தின் உச்சியில் நின்று உயிர் துறக்கும் பொருட்டு வீழ்ந்தார்.

அக்கோபுரத்தின் வட திசையில் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமான் குருவாகத் தோன்றி அவரை செங்கரத்தால் தாங்கி “சும்மா இரு சொல்றத” என்ற மௌன மறையையும் தனது வேலினால் பிரணவ மந்திரத்தை உபதேசித்து திருப்புகழை பாடும் படியும் பணித்தார்.

அருணகிரிநாதர் குருவருள் பெற்று முத்தைத்தரு என்று ஆரம்பிக்கும் திருப்புகழை முதலில் பாடியதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.
இந்து சமயத்தின் ஆன்மீக செயற்பாடுகள் மருவி வருகின்ற இன்றைய காலப்பகுதியில் மக்களினது ஆன்மீக ஈடேற்றத்திற்காகவும் இந்து சமய எழுற்சிக்காகவும் இவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்படுவது பெருமைக்குரியதே.

Comments