02.11.15- இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் காரைதீவின் பிரதிநிதித்துவம் லோ.சுலெக்ஸன்..

posted Nov 1, 2015, 6:18 PM by Liroshkanth Thiru   [ updated Nov 1, 2015, 7:19 PM ]
225 இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யப்படவுள்ள இலங்கை இளைஞர் பாரராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 07 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என். நைறூஸ் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் நடைபெறவுள்ள இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்காக காரைதீவு , ஆலையடிவேம்பு , திருக்கோவில் பிரதேச செயலக பிரிவுகளிலிருந்து தமிழ் பிரதிநிதியை தெரிவு செய்யும் நோக்கில் காரைதீவு பிரதேச செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும்  நிகழ்வு காரைதீவு  பிரதேச  செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி.சுதர்சினி சிறிகாந்  அவர்களின் தலைமையில் பிரதேச செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் இப்பிரதேசத்திலுள்ள  இளைஞர்கள் இதில் போட்டியிடுவதற்காக  வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்அந்தவகையில் காரைதீவைப் பிரதிநிதித்துவப்படுத்தி செல்வன் லோ.சுலெக்ன் அவர்கள் போட்டியிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இம்முறை காரைதீவு, ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் பிரதேச செலயக பிரிவுகளிலிருந்து ஒரேயொரு தமிழ் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments