02.12.15-காரைதீவு பிரதேச செயல பிரதேச கலை இலக்கிய விழா..

posted Dec 2, 2015, 4:07 AM by Habithas Nadaraja
கலாசார அலுவல்கள் திணைக்களமும் காரைதீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டிலும் காரைதீவு பிரதேச கலை இலக்கிய விழா இன்றைய தினம் 2015.12.02 பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திரு.பரதன் கந்தசாமி (கோட்டக்கல்வி பணிப்பாளர்) அவர்களும் அதிதிகளாக ஜனாப்.உ. லெ.ஜவாஹிர் (கணக்காளர்) திருமதி தி. கிருபைராஜா (உதவித்திட்டமிடல் பணிப்பாளர்) ஜனாப். எம்.ஜௌபர் (உதவித்திட்டமிடல் பணிப்பாளர்) திரு.ப.சிவானந்தம் (நிர்வாக உத்தியோகத்தர்) ஜனாப். எஸ். எம். அம்சர் (திவிநெகும தலைமைக் காரியாலய முகாமையாளர்) கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் மற்றும் பிரதேச கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்குமான  பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. 

அலுவலக செய்தியாளர்கள்
சசிக்காந், தஜன்Comments