02.12.19- காரைதீவில் அகில இலங்கை ஸ்ரீ தண்டாயுத பாணி பிரம்ம ஞான சபையின் அம்பாரை மாவட்ட காரியாலயம் திறப்பு..

posted Dec 1, 2019, 5:04 PM by Habithas Nadaraja   [ updated Dec 3, 2019, 9:08 AM ]
அகில இலங்கை ஸ்ரீ தண்டாயுத பாணி பிரம்ம ஞான சபையின் அம்பாரை மாவட்ட காரியாலயம் 29.11.201ம் திகதி காலை 9.30 மணியளவில் காரைதீவு 11ம் பிரிவில் கமநலசேவைக் காரியாலயத்துக்கு முன்னால் உள்ள வீதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் அகில இலங்கை பிரம்ம ஞான சபை இணைப்பாளர் சிவஸ்ரீ திரு.A.J. ரவி ஜீ அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் காரைதீவு ஸ்ரீ தண்டாயுதபாணி பிரம்ம ஞான சபையின் தலைவர் செல்லத்தம்பி அருளானந்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பூசையும்  திரு  A.J. சிவஸ்ரீ ரவி ஜீ அவர்களின் ஆத்மிக சொற்பொழிவும்.திருப்புகழ் ஒதுதல் நிகழ்வும் இடம்பெற்று போசகர் தவராஜா அவர்களின் நன்றியுரையும் இனிதே இடம்பெற்று முடிவடைந்தது.

Comments