02.12.2013- Dr.சி.கதிர்காமத்தம்பி ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி..

posted Dec 1, 2013, 10:06 PM by Web Admin
காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் தமது 25வது ஆண்டு நிறைவினைச் சிறப்பிக்குமுகமாக துறைமுக அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களின் அனுசணையுடன் நடாத்தப்படுகின்ற அமரர். டாக்டர். சின்னத்தம்பி கதிர்காமத்தம்பி ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் முதலாவது போட்டியில் காரைதீவு றிமைண்டர் கழக உதைபந்தாட்ட அணியினை எதிர்த்து மோதிய கல்முனை ஹொலி ஹீரோஸ் உதைபந்தாட்ட அணியினர் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். இவ் ஆரம்ப நிகழ்விற்காக துறைமுக அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர் திரு.அ. சிறிகாந், கழகத் தலைவர் திரு.ச.நேசராசா மற்றும் கழகத்தின் உதைபந்தாட்ட முகாமையாளர் திரு. சகாயநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தகவல்: VSC-ஊடகப்பிரிவு






Comments