03.01.15- சுயம்புலிங்க தரசனத்திற்காக பெருந்திரளான பத்தர்கள் பங்கேற்பு..

posted Jan 2, 2015, 7:44 PM by Liroshkanth Thiru
பகவான் ஸ்ரீ  சத்தியசாயிபாபாவின் புட்டபத்தியில் அமைந்துள்ள பிரசாந்தி நிலையத்தில் பகவான் ஸ்ரீ சத்தியசாயி பாபாவிற்கு போடப்பட்ட ஆசனத்தில் (இருக்கையில்) தோன்றிய சுயம்புலிங்கமானது நேற்று வெள்ளிக்கிழமை காரைதீவு பகவான் ஸ்ரீ சத்தியசாயி சேவா நிலையத்திற்கு பக்தர்களின் தரிசனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அவ்வாறு கொண்டுவரப்பட்ட சுயம்புலிங்கத்திற்கு பாலாவிசேகம் நடைபெற்று பக்தர்களின் தரசனமும் நடைபெற்றது. 
இந் நிகழ்வின் போது பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்  லிங்கத்திற்கு அவிசேகம் செய்த தீர்த்தம் ஊர்மக்களிற்கும் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்விற்கு பல்மத மக்களும் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நன்றி : டிலக்சன்

Comments