03.01.15- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணப் பொருள்கள்.

posted Jan 2, 2015, 6:41 PM by Liroshkanth Thiru   [ updated Jan 4, 2015, 7:20 PM ]
கடந்த ஒரு மாதத்திற்குள் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பெய்த அடைமழையின் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் உதவியில் நிவாரணப்பொருட்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் காரைதீவிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு 30.12.2014  (கடந்த வருடம்) திகதியிலிருந்து காரைதீவு பிரதேச செயலகத்தினூடாக நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. 

காரைதீவு 3ம் பிரிவு மக்களிற்கு கடந்த 01.01.2015 அன்று காரைதீவு 3ம் பிரிவு கிராமசேவை உத்தியோகத்தர் அலுவலகத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கிவைப்பதையும் மக்கள் நிவாரணப்பொருட்களை பெற்றுக்கொள்வதையும் படங்களில் காணலாம்.

நன்றி : பிரசாந்Comments