03.01.2012- நேரு சனசமூக நிலைய இரவு..

posted Jan 3, 2013, 3:41 AM by Web Team -A
நேரு சனசமூக நிலையத்தின் கழக இரவானது கடந்த 30.12.2012 ம் திகதி மாலை 6.30 மணிக்கு நிலையத்தின் கேட்போர்கூடத்தில் அதன் தலைவர் திரு.எஸ். நாகராசா (செயலாளர், பிரதேச சபை, காரைதீவு) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. பிரதம விருந்தினர்களாக பிரதேச செயலாளர் திரு.சிவ. ஜெகராஜன் மற்றும் பிரதேச சபைத் தவிசாளர் திரு. செ. இராசையா ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக திரு. சண்முகம் மற்றும் திரு.கோவிந்தன் ஆகியோரும், சனசமூக நிலையத்தின் போசகர்கள், நிருவாகத்தினர், அங்கத்தவர்கள், புதிய அங்கத்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின்போது நிலையத்தின் செயற்பாடுகளைத் திறம்படச் செய்த திரு.வை.கிருஸ்ணமோகன் அவர்களுக்கு சிறப்புப் பரிசில் வழங்கப்பட்டது.
மேலும் 2013ம் ஆண்டிற்கான புதிய நிருவாக சபையினரும் தெரிவுசெய்யப்பட்டது. நிருவாகத்தில் தலைவர் - திரு. மு. ரமணீதரன், செயலாளர் - திரு. வை. கிருஸணமோகன், பொருளாளர் - திரு. க. வினோதரன் மற்றும் கணக்காய்வாளர் - திரு.மு. ரகுநந்தன்  மற்றும் நிருவாகத்தினரும் தெரிவாகினர்.
தகவல்: ரமணி
 
 

karaitivunews.com

Comments