03.01.2014- தையல் டிப்ளோமா பயிற்சி நெறி ஆரம்ப நிகழ்வு..

posted Jan 2, 2014, 6:50 PM by Web Admin
காரைதீவு-08ம் பிரிவிலுள்ள மகளிர் கிராம அபிவிருத்தி நிலையத்தின் தையல் டிப்ளோமா பயிற்சி நெறி ஆரம்ப நிகழ்வானது நேற்றையதினம் (02.01.2014) மு.ப.10.30க்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.கோகுலராஜன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருமதி. நிரூபா பிருந்தன்(உதவிப் பிரதேச செயலாளர், காரைதீவு) அவர்களும் சிறப்பு அதிதிகளாக மு.இ.மு.மன்பூஸ் (DO), கோ.நவநீதன்( FC), திருமதி.வி.அமிர்தமலர்(தையல் போதனாசிரியர்) ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போதான காட்சிகளில் சில..

தகவல்: நீதன்

Comments