03.02.16- காரைதீவு - மாவடிப்பள்ளி பிரதான வீதியில் முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்து..

posted Feb 3, 2016, 12:05 AM by Unknown user
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்டதும்,காரைதீவு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்டதுமான காரைதீவு - மாவடிப்பள்ளி பிரதான வீதியில் இன்று 3ம் திகதி காலை சுமார் 9.00 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்று குறுக்கே வந்த கால்நடையுடன் (நாய்)  மோதுண்டதில் விபத்து சம்பவித்துள்ளது.

 அம்பாறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி குறுக்கே வந்த கால்நடையுடன் (நாய்) மோதுண்டதனாலேயே மேற்படி விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி:தஜன்Comments