03.02.16- காரைதீவு கடற்கரையில் கரையொதுங்கியது மூதாட்டியின் சடலம்..

posted Feb 2, 2016, 9:32 PM by Liroshkanth Thiru
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு 3ம் பிரிவு கடற்கரையில் மூதாட்டி ஒருவரின் சடலம் இன்று 03ம் திகதி காலை சுமார் 9.30 மணியளவில் கரையொதுங்கியதாக தெரியவருகின்றது.

மேற்படி மூதாட்டியின் சடலம் இனங்காணப்பட்டதோடு மூதாட்டி காரைதீவைச் சேர்ந்த 62 வயதையுடைய அமரர்.அருநாச்சலம் அழகம்மா எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.Comments