03.02.16- காரைதீவு பிரதேச செயலகத்தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு.

posted Feb 2, 2016, 5:04 PM by Liroshkanth Thiru
ஆவணங்கள், மனித உரிமையும், அடிப்படை உரிமை மற்றும் குடும்ப வன்முறை 
சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு 
காரைதீவு  நிருபர்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித அபிவிருத்தி தாபனம், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு ஆகியன இணைந்து காரைதீவு பிரதேச செயலகத்தின் வேண்டுதலில் பிரகாரம் இவ்விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. 

காரைதீவு பிரதேச செயலக உதவி திட்டமிடல் அதிகாரி  அவர்களின் தலமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள். 

இவ்விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு வளவாளர்களாக கலந்து கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் லத்தீப் இஸ்ஸடீன் அவர்கள் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் பொறிமுறைகள், அடிப்படை உரிமை, மனித உரிமைகள் ஆணைக்குழு, அரச உத்தியோகஸ்தர்களின் கடமைகள் தொடர்பாக தெளிவு படுத்தினார்.

அதனை தொடர்ந்து இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள்; பி.எம்.கலாமுடீன் அவர்கள், ஆவணங்களும், ஆவணங்களை பாதுகாத்தல் தொடர்பாவும், சட்டத்தரணி எம்.எச்.எம்.எச்.றுஸ்த்தி அவர்கள் குடும்ப வன்முறைகளும் அதற்கான  சட்டங்களும் தொடர்பாக விளக்கினார்கள். 

மனித அபிவிருத்தி தாபனம் சார்பாக உதவி இணைப்பாளர் எம்.ஜ.றியால் அவர்களும் சக உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.  
Comments