03.03.15- அமரர் கா.தனுஸ்காந் ஞாபகார்த்த சுற்று போட்டியில் 3வது போட்டி முடிவுகள்

posted Mar 2, 2015, 11:32 PM by Liroshkanth Thiru
ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகம் நடத்தும் அமரர் காண்டீபன் தனுஸ்காந்த் ஞாபகார்த்த 22 வயதுக்குட்பட்டோருக்கான கடின பந்து கிறிக்கட் சுற்று போட்டியில் 3வது போட்டியில் விவேகானந்தா விளையாட்டு கழகத்தை எதிர்த்து ஜொலிகிங்ஸ் விளையாட்டுக் கழகம் மோதியது.
முதலில் துடுப்படுத்தாடிய விவேகானந்தா விளையாட்டுக் கழகம் 18 ஓவர் முடிவில் 130 ஓட்டங்களை பெற்றது. இதில் மிகவும் சிறப்பான முறையில் துடுப்படுத்தாடிய டினேஸ்டன் 52 ஓட்டங்களை யும் சிமிற் செலர் 41 ஓட்டங்கலையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்படுத்தாடிய ஜொலிகிங்ஸ் விளையாட்டுக் கழகம் 18 ஓவர் முடிவில் 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது. விவேகானந்தா விளையாட்டு கழகம் 32 ஓட்டங்களால் வெற்றி கொண்டது.

நன்றி: 
சஜீத், கபிலன்

Comments