03.10.17- சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவையொட்டிய மாநாடு..

posted Oct 3, 2017, 10:49 AM by Habithas Nadaraja
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் உலகின் முதல் தழிழ் பேராசிரியர் முத்தழிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவையொட்டிய சுவாமி விபுலாநந்தர் மாநாடு-2017 நிகழ்வுகள் 05.10.2017, 06.10.2017 07,10.2017ஆம் திகதிகளில் மூன்று நாட்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் இராஜதுரை அரங்கில் மிகவும் சிறப்பாக இடம் பெறவுள்ளது.

வெள்ளைநிற மல்லிகையோ, வேறெந்த மாமலரோ,
வள்ளலடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?
வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.


Comments