03.12.17- ஆலயங்களில் கார்த்திகை தீப வழிபாடுகள்..

posted Dec 3, 2017, 11:00 AM by Habithas Nadaraja
கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு இன்றைய தினம்(03.12.2017) காரைதீவில் உள்ள ஆலயங்களில்  மாலை வேளையில் விஷேட பூசை வழிபாடுகள் நடைபெற்றதுடன் ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பனை"க்கு அக்கினியிட்டு நிகழ்வும் நடைபெற்றது.Comments