04.04.20- காரைதீவு TRAKS அமைப்பினால் பால்மாப்பொதிகள் வழங்கிவைப்பு..

posted Apr 3, 2020, 9:11 PM by Habithas Nadaraja   [ updated Apr 3, 2020, 9:12 PM ]
காரைதீவில் பல சமூக சேவைகளை செய்து வரும் TRAKS(றக்ஸ்)அமைப்பினர் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சுழ்நிலை காரணமாக காரைதீவு பிரதேச செயலாளரின் வேண்டுகோளிற்கிணங்க அமைப்பின் ஸ்தாபகரும் போசகருமான அருளானந்தம் வரதராசாவின் வழிகாட்டலில் காரைதீவின் 12 கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள சமுர்த்தி நிவாரணம்பெறும் 05 வயதிற்குட்பட்ட சிறுவர்களைக் கொண்ட 550 குடும்பங்களிற்கு TRAKS(றக்ஸ்)அமைப்பினால் சுமார் 900/= பெறுமதியான பால்மாப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.Comments