04.05.20- விபுலாநந்தாவில் நால்வருக்கு 9ஏ சித்திகள்..

posted May 3, 2020, 6:11 PM by Habithas Nadaraja
காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியின் நான்கு மாணவர்கள் இம்முறை க.பொ.த. சா.தரப்பரீட்சையில் 9ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாக அதிபர் ம.சுந்தரராஜன் தெரிவித்தார்.

எஸ்.லிதுசான் பி.டிலக்சன் கே.சறோமிகா எஸ்.நுக்சன் ஆகிய மாணவர்களே இவ்விதம் சகல பாடங்களிலும் ஏ தரசித்திகளைப் பெற்றுள்ளனர்.

இதனைவிட எம்.லோகுதர்சன் எம்.வினோஜிகன் ஆகியோர் 8ஏ1பி சித்திகளையும் உமா.கௌசிகன் 7ஏ2பி சித்திகளையும் ரி.குகசங்கீத் 6ஏ3பிசித்திகளையும் பி.பிரகாந்த் 6ஏ2பி1சி சித்திகளையும் பெற்றுள்ளனர்.

(காரைதீவு  நிருபர்)


Comments