எமது karaitivunews.com இணையதள ஊடகமானது முதன்முறையாக நடாத்திய 2014ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த புலமையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் , அம் மாணவர்களை புலமையாளர்களாக்கிய ஆசான்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (04) இணையதளத்தின் பணிப்பாளர் திரு வை.கோபிகாந் அவர்களின் தலைமையில் காரைதீவு சண்முக மகா வித்தியாலய, சண்முகா கலாலய அரங்கில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந் நிகழ்வில் கௌரவ அதிதிகள் மற்றும் சிறப்பு அதிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். கௌரவ அதிதிகளின் வரிசையில் எமது karaitivunews.com இணையதளத்தின் ஆலோசகர்களான திரு.ஆர்.தவராஜா (முகாமையாளர்,இலங்கை வங்கி.காரைதீவு) திரு.எம்.சிதம்பரநாதன் (கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்) திரு.எம்.வித்தியானந்தன் (சிறைச்சாலை உத்தியோகத்தர்) திரு.எம்.வரதராஜன் (புள்ளிவிபர உத்தியோகத்தர்) திரு.எஸ்.நேசராஜா (உத்தரவுபெற்ற நில அளவையாளர்) திரு.எஸ்.சஞ்ஜீவ் (உத்தியோகத்தர் இலங்கை துறைமுக அதிகாரசபை) திரு.எம்.புஸ்பநாதன்(உரிமையாளர் நிதுஸ் அச்சகம்) திரு.எ.பார்த்தீபன் (ஆசிரியர், விபுலானந்தா மத்திய கல்லூரி) திரு.எம்.சுந்தரராஜன்(அதிபர்,கண்ணகி இந்து வித்தியாலயம்) திரு.கே.பத்மநாதன் (மக்கள் வங்கி உத்தியோகத்தர்) அவர்களும் சிறப்பு அதிதிகளாக திரு.ரி.வித்தியராஜன் (அதிபர், விபுலானந்த மத்திய கல்லூரி காரைதீவு) திரு.ஆர்.ரகுபதி (அதிபர், சண்முக மகா வித்தியாலயம் காரைதீவு) திரு.எஸ்.மணிமாறன் (அதிபர்.இ.கி.மி பெண்கள் பாடசாலை காரைதீவு) செல்வி.கே.நாகரஞ்சனி (அதிபர்.இ.கி.மி.ஆண்கள் பாடசாலை காரைதீவு) திருமதி.கே.தம்பிராஜா (அதிபர், விஷ்னு வித்தியாலயம் காரைதீவு) திரு.எஸ்.மோகன் (அதிபர், விக்னேஸ்வரா வித்தியாலயம் காரைதீவு) அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு மேலும் இந்நிகழ்வில் மாணவர்களை புலமையாளர்களாக்கிய ஆசான்கள் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இந் நிகழ்வின் போதான புகைப்படங்களை பெற்றுக்கொள்ள காரைதீவில் அமைந்துள்ள Abi Digital Studio இனை நாடவும். தொ.பே: 0757657619 |
காரைதீவு செய்திகள் >