05.01.20- திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை 5ம் நாள் நிகழ்வு..

posted Jan 4, 2020, 7:45 PM by Habithas Nadaraja   [ updated Jan 4, 2020, 8:05 PM ]
காரைதீவில் வருடாவருடம் இடம்பெற்று வருகின்ற திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலமானது இம்முறையும் காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில்  சிறப்பான முறையில் இடம்பெற்று வருகின்றது. 

அந்தவகையில் திருப்பள்ளியெழுச்சி ஜந்தாம் நாள் ஊர்வலமானது  05.01.2020ம் திகதி அதிகாலை 4.00 மணியளவில் காரைதீவு 
அருள் மிகு ஸ்ரீ ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்துஆரம்பமாகி மட்டுப்படுத்தப்பட்ட தேரோடும் வீதிவழியாக காரைதீவு 
அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு சென்று பூசை வழிபாடுகளின் பின்னர் பாடசாலை மாணவர்களின் சமய சொற்பொழிவை தொடர்ந்து திருவாசகம் முற்றோதல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு  மீண்டும்   ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து ஆலயத்தை வந்தடைந்ததுடன் நிறைவடைந்தது.































Comments