05.06.19- அருள்மிகு ஸ்ரீ உகந்தமலை தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்..

posted Jul 5, 2019, 6:32 AM by Habithas Nadaraja   [ updated Jul 5, 2019, 6:34 AM ]
கிழக்கிலங்கையின் தென்கோடியில் நாநிலங்களின் மத்தியில் மனோரம்மியமான சூழலில் அமைந்துள்ள அருள்மிகு உகந்தமலை ஸ்ரீ முருகனாலய வருடாந்த ஆடிவேல்விழா மஹோற்சவம் (03.07.2019)ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில்  காலையில் கிரிகைகளுடன் ஆரம்பமாகி பல நூற்றுக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசங்களோடு கொடியேற்றத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.தொடர்ந்து 15நாள் திருவிழாக்க்கள் சிறப்பாக இடம் பெறும்.விழாக்காலங்களில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Comments