05.07.18- காட்டுப்பாதை திறப்பு:1780பேர் காட்டுக்குள்பிரவேசம் அகபுற சுமைகள் குறையும் சிவஸ்ரீ.சீதாராம் குருக்களின் ஆசி..

posted Jul 4, 2018, 5:59 PM by Habithas Nadaraja   [ updated Jul 4, 2018, 6:03 PM ]
கதிர்காமஆடிவேல் விழா உற்சவத்தையொட்டி பாதயாத்திரையில் செல்லும் பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை (04.07.2018)  காலை 6.45மணிக்கு பக்தர்களின் அரோஹரா கோசம் விண்ணைப்பிளக்க திறந்துவைக்கப்பட்டது.

முன்னதாக உகந்தமலை முருகனாலயத்தில் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ.க.கு.சீதாராம் குருக்களின் விசேட பூஜை அதிகாலை 5.25மணியளவில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.விமலநாதன் உதவி அரசாங்கஅதிபர் கே.உதார, லாகுகல பிரதேசசெயலாளர் சந்துருவன் உதவிபிரதேசசெயலர் கே.நவநீதன்,காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் மற்றும் பிரதிப்பொலிஸ்மாஅதிபர் நுவன் வெத்தசிங்க பொத்துவில் பொலிஸ்பொறுப்பதிகாரி நிசாந்த இராணுவபொறுப்பதிகாரி மேஜர்ஜெனரல் எமல்.உம்.முதலிகே உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஆலயத்தலைவர் பொடிநிலமே திசாநாயக்க பொருளாளர் வீ.பத்மநாதன் உறுப்பினர் தில்லை.உருத்திரன் உள்ளிட்ட ஆலய நிருவாகசபையினரும் கிழக்கு மாகாண பிரதி சுகாதார சேவைப்பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் சிரேஸ்ட்ட பொதுச்சுகாதாரப்பரிசோதகர் எஸ.புனிதராஜா  இருந்தனர்.அங்கு 30நிமிடங்கள் விசேடபூஜை நடைபெற்றுமுடிந்ததும் சீதாராம் குருக்களின் ஆசியுரை இடம்பெற்றது.

அங்கு அதிகாரிகள் அனைவரும் வந்ததும் காலை 6.45மணியளவில் காட்டுப்பாதைக்கான கதவு திறக்கப்பட்டது. ஆரோஹரா என்றகோசம் விண்ணைப்பிளக்க 1780பேர் காலையில் காட்டுக்குள் சுமைகளோடு பிரவேசித்தனர்.

பாதயாத்திரீகர்களுக்கு காரைதீவுபிரதேசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் பேரிந்துப்பழம் பாக்குவெற்றிலைகளை வழங்கினார்கள். இன்னும்சிலர் பால்சோறு வழங்கினார்கள். காலை 9மணிவரை அடியார்கள் காட்டுக்குள்பிரவேசித்தனர்.  நண்பகலிலும் பிருவெசித்தனர். இப்படி எதிர்வரும் 22ஆம் திகதிவரை அடியார்கள் காட்டுக்குள்ளாள் கடக்கமுடியும்.


(காரைதீவு  நிருபர்)


Comments