05.07.18- ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 67வது குருபூசையை முன்னிட்டு    மாபெரும் சித்தர் ரத பவனி ஊர்வலம்..

posted Jul 4, 2018, 6:07 PM by Habithas Nadaraja
பன்னெடுங் காலமாக ஈழமணித் திருநாடெங்கும் நடமாடி பல சித்துக்கள் புரிந்து காரைதீவு பதியில் ஜீவ சமாதி அடைந்த ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் ரத பவனி ஊர்வலமானது 06.06.2018 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 6.00 மணிக்கு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஜீவ சமாதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகும்.

இவ் ஊர்வலமானது  காரைதீவு, கல்முனை நகர் உள் வீதிகளுடாகச் சென்று நற்பட்டிமுனை,சேனைக்குடியிருப்பு, கிட்டங்கி ஊடாக அன்னமலை, வேப்பையடி, மண்டூர்  முருகன் ஆலயம் சென்று மீண்டும்     வேப்பையடி, நாவிதன்வெளி, வீரமுனை, சம்மாந்துறை பிரதான வீதியூடாக காரைதீவை வந்தடையும்.

எனவே சித்தர் ரத பவனியில் கலந்து சித்தரின் அருளாசியைப் பெறுமாறு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஜீவ சமாதி ஆலய பரிபாலன சபையினரும், இந்துசமய விருத்திச் சங்கத்தினரும் வேண்டி நிற்கின்றனர்.

Comments