05.07.18- உலகத்தமிழர் வரலாற்றுமையத்தில் பிரித்தானியாவின் காரைதீவு ஒன்றியம் சிறப்பாக நடாத்திய முதல் கலாசார விளையாட்டுவிழா..

posted Jul 4, 2018, 6:12 PM by Habithas Nadaraja
லண்டனிலுள்ள உலகத்தமிழர் வரலாற்றுமையத்தில் பிரித்தானியாவின் காரைதீவு ஒன்றியம் முதல்முதலாக  கலாசார பாரம்பரிய விளையாட்டுவிழாவையும் ஒன்றுகூடலையும் வெகுவிமரிசையாக நடாத்தியது.

கடந்த சனிக்கிழமை(30) பொறியியலாளர் வடிவேல் ஜெகதாஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரித்தானியாவிலுள்ள காரைதீவைச்சேர்ந்த அத்தனை குடும்பங்களும் கலந்து சிறப்பித்தன.

அங்குள்ள பிள்ளையார் ஆலயத்தில் அமுதுபடைத்து விசேடபூஜையுடன் வழிபட்டபின் கலாசார நிகழ்வுகள் காலை 10மணிக்கு ஆரம்பமாயின. தாயகத்தில் நடப்பதுபோன்று அத்தனை நிகழ்ச்சிகளும் அங்கு நடந்தேறின.

கயிறிழுத்தல் முட்டிஉடைத்தல் யானைக்கு கண்வைத்தல் சாக்கோட்டம் சங்கீதக்கதிரை பணிஸ் உண்ணுதல் சமநிலைஓட்டம் சிறுவர்கள் பங்கேற்ற பலூன்ஊதி உடைத்தல் மிட்டாய்பை ஓட்டம் முதலான பல நிகழ்ச்சிகள் நடந்தேறின.

இறுதியில் பரிசளிப்பு நிகழ்வு செயலாளர் தாமோதரம் வாசிகனின் நன்றியறிதலுடன் மாலை 6மணிக்கு நிறைவுபெற்றது. 

பிரித்தானியாவில் இருக்கக்கூடிய அனைத்து காரைதீவுமக்களும் கலந்துகொண்டு உறவுகளை வலுப்படுத்திக்கொண்டு மகிழ்ச்சியுடன் விளையாட்டுநிகழ்விலும் ஒன்றுகூடலிலும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

(காரைதீவு  நிருபர்)
Comments