05.07.19- காரைதீவு அடியவர்கள் உகந்தமலை முருகனாலய கொடியேற்றத் திருவிழாவில் கலந்துகொண்டு பாதையாத்திரை..

posted Jul 5, 2019, 7:03 AM by Habithas Nadaraja
வரலாற்று சிறப்பு மிக்க கிழக்கிலங்கை அருள்மிகு உகந்தமலை ஸ்ரீ முருகனாலய வருடாந்த ஆடிவேல்ழாவிற்கான கொடியேற்றத் திருவிழாவில் கலந்துகொண்டு காரைதீவைச்சேந்த பல்லாயிக்கணக்கான  அடியவர்கள் பாதையாத்திரையாக கதிர்காமம் புறப்பட்டனர்.

கதிர்காம ஆடிவேல்விழாவிற்காக ஒரேநாளில் 6ஆயிரம் பாதயாத்திரகர்கள் (03.07.2019)ம் திகதி காட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.
வடக்கு கிழக்கிலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் அடியார்கள் உகந்தமலை முருகனாலயத்தை வந்தடைந்து வரலாற்றுப்பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழாவிற்கான கொடியேற்றத் திருவிழாவில் கலந்துகொண்டு அனைவரும் புறப்பட்டனர்.

இந்தளவு அதிகமளவான பாதயாத்திரீகர்கள் காட்டுக்குள் பிரவேசித்தமை முதல்தடவை என ஆலய வண்ணக்கர் சுதுநிலமேதிசாநாயக்க தெரிவித்தார்.

கதிர்காமத்திற்கு செல்லும் குமண யால சரணாலய காட்டுப்பாதை  27.06.2019 ஆம் திகதி காலை திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 13 தினங்கள் திறந்திருக்கும் இக் காட்டுப் பாதையானது 09.07.2019 ஆம் திகதி மாலை 3 மணியுடன் மூடப்படவுள்ளது என அம்பாறை மாவட்ட மேலதிக அரசஅதிபர் வே.ஜெகதீசன் தெரிவித்தார்.

Comments