05.09.18- வெருகலம்பதிக்கான பாதயாத்திரை ஆரம்பம் 4வது தினம்..

posted Sep 4, 2018, 5:56 PM by Habithas Nadaraja
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலய மஹோற்சவத்தையொட்டிய வருடாந்த பாதயாத்திரை (05.09.2018)  நான்காவதுநாளாக தொடர்கிறது.

கடந்த 2ஆம் திகதி  அதிகாலை  காரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய  இப்பாதயாத்திரை 08தினங்கள் தொடர்ச்சியாக இடம்பெறும்.செல்லும் ஆலயங்கள்தோறும் பஜனை பாடி சிரமதானம் செய்து பாதயாத்திரையை மேற்கொள்வதை குறிப்பிடலாம்.

காரைதீவிலிருந்து வேல்சாமி  மகேஸ்வரன் தலைமையிலான பாதயாத்திரைக்குழுவினர் இப்பாதயாத்திரையில் வழமைபோல் இம்முறையும் ஈடுபடுகின்றனர்.காரைதீவு ஸ்ரீ நந்தவனப் பிள்ளையார் கதிர்காம பாதயாத்திரீகர்கள் சங்கம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.

வரலாற்றுப்பிரசித்திபெற்ற வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 28ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

பாதயாத்திரைக்குழுவிர் கடந்த 02ஆம் திகதி தேத்தாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திலும் 03ஆம் திகதி ஆரையம்பதி வீரம்மாகாளி ஆலயத்திலும் 04ஆம் திகதி ஊறணி கொத்துக்குள மாரியம்மனாலயத்திலும் தங்கினர்.

05ஆம் திகதி வந்தாறுமூலை பிள்ளையார் ஆலயத்திலும் 06ஆம் திகதி வாழைச்சேனை சித்திவிநாயகர் ஆலயத்திலும் 07ஆம் திகதி பனிச்சங்கேணி ஸ்ரீ முருகனாலயத்திலும் 08ஆம் திகதி கதிரவெளி ஸ்ரீ திருச்செந்தூர் ஆலயத்திலும் தங்கி இறுதிநாளாகிய 09ஆம் திகதி வெருகலம்பதி ஆலயத்தைச் சென்றடைவார்கள். 

 (காரைதீவு  நிருபர்)
Comments